என் பயணங்களில் நான் சந்தித்த ஒரு நல்ல அனுபவத்தை பகிர்வது பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன்!
சற்றே நீளமான பதிவிற்கு மன்னிக்கவும்.
ஒருமுறை
பணி நிமித்தமாக இரயிலில் பயணம் செய்தபொழுது…, நான், எனக்கருகில் சென்னை
சென்ட்ரலில் இருந்து பயணம் செய்த ஒரு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குடும்பம்,
என் நண்பர் (ஒரு ஆந்திர பிரதேச இளைஞர்), எங்கள் அருகில் மற்றொமொரு ஒடிசா
இளைஞர் (சென்னையில் பணிபுரிபவர்) பயணம் செய்தோம்.
சில மணிநேர பயணங்களின் பின், பல்வேறு விசயங்களினூடே பஞ்சாபை சேர்ந்த குடும்ப தலைவர் எங்களிடம் கேட்டார். (நான் மற்றும் என் நண்பன்)
அவர்: ஏன் நீங்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில்லை? ஏதேனும் காரணம் உண்டா?
என் நண்பர்: உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்! சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளதா உங்களுக்கு?
அ: பார்ப்போம். முக்கியமான பொழுதுபோக்கு சினிமாதான்.
ந: என்ன படம் கடைசியாக பார்த்தீர்கள்?
அ: PK. எல்லோருக்கும் பிடித்த படம் அது.
ந: கடைசியாக பார்த்த பஞ்சாப் மொழி படம் எது?
அ: (சிறிது நேர யோசனைக்குப்பின்… ) நினைவில் இல்லை. உத்தேசமாக 3அல் 5வருடங்கள் இருக்கலாம்.
ந: ஏன் சமீபமாக பார்க்கவில்லை?
அ: எங்களுக்கு இந்தி தெரியும் அதனால் இந்தி படம் பார்க்கிறோம்.
ந: இந்தி தெரிவதால் பார்க்கவில்லையா, இல்லை.. நல்ல படங்கள் வராததால் பார்க்கவில்லையா?
அ:
இந்தி படங்கள் எல்லா பிராந்தியங்களிலும் வெளியாகின்றன. எல்லோராலும்
புரிந்து கொள்ள முடிகிறது. எந்த சிரமமும் இல்லை. மேலும் பஞ்சாபி
மொழிப்படங்கள் குறைந்தளவில் வெளியாவதால் பார்ப்பதும் இல்லை.
ந: கடைசியாக வந்த பஞ்சாபி மொழியின் சிறந்த பாடல்?
அ: கடந்த 10 வருடங்களில் குறிப்பிடும்படியாக திரையிசைப் பாடல்கள் இல்லை.
ந: எதனால் அதிக அளவில் வருவது இல்லை?
அ: யாரும் விரும்பி பார்ப்பது இல்லை. அதனால் இருக்கலாம்.
ந:
உங்கள் கேள்விக்கு வருகிறேன். உங்கள் சொந்த மொழியின் படங்கள் இரண்டாம்
தேர்வாக போய்விட்டன. காரணம் சிறந்த படைப்புகள் இல்லாமல் இல்லை. சிறந்த
படைப்பை அளிப்பவர்கள் அவற்றை இந்தியில் அளித்ததால்!
நாளடைவில்,
பஞ்சாபி மொழியினை உங்கள் அல்லாத பிறமொழி ஆதிக்கப்படுத்தியது. பஞ்சாபி
மொழியின் கலைஞர்கள் மறக்கடிக்க/ புறக்கணிக்கப்பட்டனர்.
உங்களை அறியாமலே, மெல்ல உங்கள் மொழியை ஒரு தலைமுறை இடைவெளியில் சில சதவீத அளவை கொன்றொழித்து விட்டீர்கள்.
அ: உண்மைதான்! முற்றிலும் உண்மை. எங்களது பால்ய பருவத்தில் இருந்த பல பிராந்திய சிறுகதைகள்கூட இப்பொழுது புழக்கத்தில் இல்லை.
ந: என் கூற்று தவறாக இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் ஏன் உங்கள் சொந்த மொழியை பின்பற்றக்கூடாது?
அ: இனிமேல் முடியும் என தோன்றவில்லை. இளைய தலைமுறையில் பலருக்கு பஞ்சாபி எழுத்து வடிவங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதை
கவனித்து கொண்டிருந்த ஒடிசா நபர் தொடர்ந்தார். மொழியானது, ஒரு பண்பாடு
மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கியது. ஒரு மொழியை பயிலும் பொழுது உங்கள் மூளை
அக்கலாச்சாரத்தை உள்வாங்கி கிரகித்துக்கொள்ளும். எந்த மொழி அதிகமாக நாம்
உபயோகப்படுத்துகிறோம் என்பதைப்பொறுத்து உங்கள் பழக்க வழக்கங்கள் தானாக
மாறிவிடும்.
மேலும்,
தென்னிந்திய மொழிகளில் தமக்கு ஈர்ப்பு உள்ளதாகவும், தென்னிந்திய
மாநிலங்கள் தம் உரிமையை காப்பதில் வல்லவர்கள் எனவும், அதனாலேயே தனக்கு
தென்னிந்திய மாநிலங்களை மிகவும் பிடிக்கும் என கூறினார்.
ஒருவகையில் அவர் கூறியது 100% உண்மை என தோன்றியது எனக்கு. “சமீபத்திய மேற்கத்திய மோகம் மொழியினூடாக கூட வந்திருக்கலாம்”
ஒடிசா நண்பர் தொடர்ந்தார்…
இந்திய
மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கே ஒரு வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, கலை
தன்னகத்தே கொண்டது. ஆனால், இந்தி மொழி உண்மையில் தனிப்பட்ட மொழி அல்ல.
ஃபார்ஸி, உருது, சமஸ்கிருதம், போஜ்பூரி போன்ற மொழிகளில் கடன் வாங்கிய
வார்த்தைகளை வைத்து வளர்ந்த ஒரு மொழியாகும். இதற்கென தனி கலாச்சாரமோ,
பண்பாடோ கிடையாது…
இந்த கூற்று எனக்கு புதுமையாக இருந்தது..
என்னை கேட்டால், மூன்றாவது மொழி அவசியமாக இருப்பின் French, German, Japanese போன்ற மொழிகளை பயிற்றுவிக்கலாம்.
வாழ்க்கைக்கும் உதவும். அயல்நாட்டின் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்தியை கற்றுக்கொள்வது, வடிவேலு பாணியில்…
“வெண்கல பூட்டை உடைத்து, வெளக்கமாத்த திருடுவதற்கு” சமம்.
உங்கள் கேள்விக்கான நேரடி பதில்: கலாச்சாரத்தின் மீதான நேரடி தாக்குதல்! இதனால் பெறுவதைக்காட்டிலும், இழப்பதே அதிகம்!
இப்பொழுது இருக்கும் நடைமுறையை தொடர்வதே நலம் பயக்கும்! தேவைப்படுபவர்கள், option ஆக இந்தியை சேர்த்துக்கொள்ளலாம்.
SHOULDN'T BE IMPOSED!
பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி!
SOURCE : CLICK HERE
Comments
Post a Comment